கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்கு வாங்கி அதனை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கஸ்பா பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஓட்டுனர் ஆன இவர், கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஆற்காடு,சிப்காட், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்டவர்களிடம் கார்களை வாடகைக்கு எடுத்து இருக்கிறார். முதல் நான்கு நாட்களுக்கு சரியான முறையில் வாடகை செலுத்தி விட்ட பின்னர் அலைகளைத்துள்ளார். தொடர்ந்து வாடகைக்கு எடுத்த கார்களை தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக அடகு வைத்து,
70 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 20க்கும் மேற்பட்ட கார்களை இதேபோல் அடகு வைத்து உதயகுமார் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக காரை பறிகொடுத்தவர்கள் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப்பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வந்ததில் உதயகுமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.