2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிவை தாக்கல் செய்துள்ளார். அதில் கரும்பு மற்றும் உணவு தானியங்களிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல், மே மாதத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது நாட்டிலுள்ள பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகளில் முழு கொள்ளளவு கச்சா எண்ணெயை வாங்கி நிரப்புவதன் மூலம் 5000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.