மடகாஸ்கர் நாட்டில் சூறாவளி உருவாகி ஒரே நாளில் 20 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடகாஸ்கரின் வடக்கு பகுதியில் இருக்கும் மனன்ஜாரி என்ற நகரத்திலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பத்சிராய் என்னும் சூறாவளி ஏற்பட்டுள்ளது. மேலும் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதியை நோக்கி இந்த சூறாவளி கடந்ததை தொடர்ந்து, அந்நகரில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
மேலும், சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பலத்த மழை, நிலச்சரிவு ஏற்பட்டதோடு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உருவானது. எனவே 1,50,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பிற இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும் கடந்த இரண்டு நாட்களில் சூறாவளி அதிக சேதத்தை ஏற்படுத்தியது. இதில் இன்று ஒரே நாளில் சுமார் 20 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.