முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தையொட்டி 26 பேர் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அனுப்பானடியில் 20 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என 26 பேர் எம்ஜிஆர், ஜெயலலிதா திருக்கோவிலில் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி மொட்டை அடித்துள்ளனர். மதுரை அனுப்பானடியில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு கோவில் அமைத்து அதில் வழிபாடு செய்துவருகின்றனர்.
நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி அந்த கோயிலின் நிர்வாகி எம்ஜிஆர் நாகராஜன் தலைமையில் 20 ஆண்கள் 6 பெண்கள் என 26 பேர் தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி மொட்டை அடித்துக் கொண்டனர். முன்னதாக திருக்கோயில் நிர்வாகி எம்ஜிஆர் நாகராஜன், மதுரை தெற்கு இரண்டாம் பகுதி கழக செயலாளர் ஜோசப் ஆகியோர் தலைமையில் அதிமுக தொண்டர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.