சூரச் உயிரியல் பூங்காவின் காப்பாளரை புலி தாக்கியதற்கு அவரின் கவனக் குறைவு தான் காரணம் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் எஸ்தர் (55 வயது). இவர் கடந்த 20 ஆண்டுகளாக சூரிச் உயிரியல் பூங்காவில் பாதுகாப்பாளராக வேலை செய்து வருகின்றார். இவர்தான் அங்குள்ள மிருகங்களுக்கு உணவு வைத்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவர் புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதியினை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இவர் புலிகள் இருக்கும் கூண்டினை சரியாக பூட்டாமல் அந்த பகுதியினை சுத்தம் செய்துள்ளார். இதனால் கூண்டிலிருந்து வெளியே வந்த புலி இதனை வருடங்கள் தனக்கு உணவு வைத்தவர் என்று கூட பார்க்காமல் எஸ்தரை தாக்கியுள்ளது.
இதனால் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதனை கண்ட மற்ற பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் எஸ்தர் புலி இருக்கும் கூண்டை சரியாக அடைக்காமல் வேலை செய்ததால் தான் புலி அவரை தாக்கியுள்ளது. இதற்கு அவரின் கவன குறைவுதான் காரணம் என்று கூறி விசாரணையை முடித்து வைத்துள்ளனர்.