Categories
தேசிய செய்திகள்

20 மாணவிகளை….. பலாத்காரம் செய்த 9ஆம் வகுப்பு மாணவன்….. கேரளாவை உலுக்கிய சம்பவம்….!!!!

9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கண்ணூர் நகரத்தின் மையப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் வெளி மாநிலத்தில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி புதிதாக சேர்ந்துள்ளார். அந்த மாணவியுடன் அதே வகுப்பில் இருக்கும் ஒரு மாணவன் நெருங்கி பழகியுள்ளார். அந்த மாணவன் மாணவியின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று மிகக்குறுகிய காலத்திலேயே பெண்ணின் பெற்றோரிடம் நல்ல பெயரை சம்பாதித்தான். இதற்கு இடையே வெளிமாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு வந்திருந்ததாலும், புதிய பள்ளியில் சேர்ந்ததாலும் அந்த மாணவி மனதளவில் சற்று பாதிக்கப்பட்டிருந்தார்.

இதை தெரிந்து கொண்ட மாணவன் மாணவிக்கு போதை பொருள் கொடுத்து அதை பயன்படுத்தினால் மனதில் உற்சாகம் பிறக்கும் என்று கூற அதை அந்த மாணவியும் பயன்படுத்தியுள்ளார். நாளடைவில் அந்த மாணவி போதைக்கு அடிமையாக தினமும் போதைப் பொருள் இல்லாமல் தன்னால் தூங்கவே முடியாது என்ற நிலைமைக்கு சென்றுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மாணவன் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை தனது செல்போனிலும் பதிவு செய்து கொண்டார். இந்நிலையில் மாணவியின் செல்போனில் இருந்த பலாத்கார காட்சிகளை மாணவியின் பெற்றோர் தற்செயலாக பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தங்களது மகள் போதைக்கு அடிமையாக இருப்பதை அறிந்த பெற்றோர் அம்மாணவியை சிகிச்சைக்காக போதைப்பொருள் மீட்பு மையத்தில் சேர்த்தனர். இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் மாணவியின் உடல்நலம் தேறியது. அதன் பிறகு மாணவியின் பெற்றோர் கண்ணூர் டவுன் போலீஸில் மாணவன் மீது புகார் கொடுத்தார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இதே போல் இந்த மாணவன் இருபதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போதை பொருள் கொடுத்து அவர்களை அடிமையாக்கி பலாத்காரம் செய்து வந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |