கோவிலுக்கு சொந்தமான இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போரூர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் 15 கிரவுண்டு மனை சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானதாகும். இதனை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர்.