Categories
விளையாட்டு

“20 ஆண்டுகால சாதனையை முறியடித்து”….. சர்வதேச தடகள போட்டியில்…. தங்கம் வென்ற இந்திய வீராங்கனை….!!!!

சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனையான ஜோதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 13.23 வினாடிகளில் இலக்கை கடந்து ஜோதி தங்கம் வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அனுராதா பிஸ்வாலின் 20 ஆண்டுகால தேசிய சாதனையும் இவர் முறியடித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு அனுராதா பிஸ்வால் 13.38 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார்.

அவரது சாதனையை முறியடித்து 13.23 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து ஜோதி தங்கம் வென்றுள்ளார். ஆந்திராவை சேர்ந்த ஜோதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ரிலையன்ஸ் பவுண்டேஷனில் உள்ள பயிற்சி மைதானத்தில், பயிற்சியாளர் ஜோசப் ஹில்லியரிடம் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |