Categories
சினிமா தமிழ் சினிமா

20 ஆண்டுகளுக்கு பிறகு…. “மீண்டும் இணையும் ‘5 ஸ்டார்’ ஜோடி”…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

20 ஆண்டுகளுக்கு முன்பு 5 ஸ்டார் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்த பிரசன்னா கனிகா இருவரும் தற்போது மீண்டும் ஒரு வெப்சீரியஸில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் நடிகராக வலம் கொண்டிருந்தவர் பிரசன்னா. இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியவற்றிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமா உலகில் 2002ஆம் ஆண்டு ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தை சுசிகணேசன் இயக்கியிருந்தார். இதையடுத்து இவர் நடித்த பல படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெறாத காரணத்தினால் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வெப்சீரிஸில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை கனிகா நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் மீண்டும் இணைய உள்ளார்கள். இதுகுறித்து நடிகை கனிகா கூறியுள்ளதாவது, “எனது முதல் படம் ஜோடியுடன் மீண்டும் இணையப் போவது மகிழ்ச்சியளிக்கின்றது” என குறிப்பிட்டு இருவரும் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |