சென்னையில் 20 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. அதனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கும் அபாயம் ஏற்பட்டது. அதன் காரணமாக வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த 20 நாட்களாக விலை மாற்றம் இன்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 20வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் விலை ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் உட்பட தேர்தல் நடக்கவிருக்கும் ஐந்து மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.