Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆரம்பமே 2 விக்கெட்…என்ன ஆச்சி உங்களுக்கு…தடுமாறும் ஆஸி …!!

இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின்  டெஸ்ட் தொடரின் நான்காம் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் – மார்கஸ் ஹாரிஸ் இணை தொடக்கத்தில், இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ், டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினார்.

பின்பு மறுமுனையில் நிதானமாக விளையாடிய மார்கஸ் ஹாரிஸ் 5 ரன்கள் எடுத்து அடுத்த ஓவரில் அர்ஜுன் தாக்கூர் வீசிய முதல் பந்தில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்து மார்னஸ் லபுசாக்னே – ஸ்டீவ் ஸ்மித் விளையாடிய ஆட்டத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்த ஆரம்பித்தனர்.

ஆகவே ஆஸ்திரேலிய அணி முதல் நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் எடுத்துள்ளது.ஆஸ்திரேலியா அணியின் ஆட்டக்காரர்கள் ஸ்டீவ் ஸ்மித் 30 ரன்களுடனும், மார்னஸ் லபுசாக்னே 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ்-  நவ்தீவ் சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Categories

Tech |