Categories
உலக செய்திகள்

2 வருட போராட்டம்… கணவர்களை சந்திக்க நாடு விட்டு நாடு வந்த மனைவிகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தானை சேர்ந்த தங்கள் கணவர்களைத் தேடி இரண்டு பெண்கள் பாகிஸ்தானில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புல்வாமா தாக்குதல் நடந்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இதனால் எல்லை தாண்டி செல்வது சட்டரீதியான பிரச்சனையாக கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங் என்ற இளைஞருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜகான் கன்வர்  என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. அதேபோன்ற நோபால் சிங் பாட்டி மற்றும்  கைலாஷ் பாயும் ஆகியோர்களுக்கும் திருமணம் நடந்துள்ளது.

இவர்களின் திருமணம் முடிந்த தருணத்தில் புல்வாமா தாக்குதல் ஏற்பட்டதால் மணமகள்கள் இருவரும் பாகிஸ்தானில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 3 மாதங்களுக்கு பிறகு  இந்தியா வருவதற்கான வழிமுறைகளும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருவரும் தன் கணவன்களை சந்திக்கும் தருணம் வந்து விட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மணமகள் ஜகான் கன்வர் திருமணம் முடிந்தவுடன் பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டோம்  இந்தியா வருவதற்கான விசா அளிக்கப்படவில்லை. என் பெற்றோர்கள் என் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையுடன் இருந்தனர்.

ஆனால் நாங்கள் இப்போது இந்தியாவை வந்தடைந்தோம்  இப்பொழுது தான் எங்களுக்கு திருமணம் நடந்த உணர்வு வருகிறது. இந்தியா வந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மகேந்திரசிங் பல தடைகளை தாண்டி மனைவியை இந்தியா அழைத்து வந்தது உற்சாகத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.

Categories

Tech |