ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது சுழலில் சிக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் வீரமடை கிராமத்தில் இருக்கும் தென்னம் பண்ணை ஆற்றங்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் அய்யனார் கோவிலுக்கு பக்தபூர் தெருவில் வசிக்கும் செந்தில் மற்றும் சேதுராமன் ஆகிய இருவரும் தங்களின் குடும்பத்தினருடன் வந்துள்ளனர். அப்போது பெண்கள் மற்றும் பெரியவர்கள் சாமியை வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து செய்து கொண்டிருக்கும் போது செந்தில் மகனான ஆகாஷ் மற்றும் சேதுராமன் மகன் அபினாஷ் உள்பட 4 பேர் அருகில் இருந்த தென்பெண்ணை ஆற்றில் குறித்துள்ளனர்.
இதில் இரண்டு பேர் குளித்துவிட்டு கோவிலுக்கு திரும்பி வந்தனர். அதன்பின் ஆகாஷ் மற்றும் அபினாஷ் ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென ஆற்றில் ஏற்பட்ட நீர் சுழலில் இருவரும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். பிறகு நெடுநேரமாகியும் இருவரும் கோவிலுக்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ஆற்றங்கரைக்கு தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து அபினாஷ் மற்றும் ஆகாஷ் ஆகிய 2 பேரும் தண்ணீரில் இறந்து மிதந்ததை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி 2 பேர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.