Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“போட்டோ காட்டி மிரட்டல்” 9ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது….!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை அடுத்த ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளி மாணவிக்கும் ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை விஷ்வா தனது நண்பர்களுக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.

Related image

இந்த படத்தை விஸ்வ நண்பர்களான கவியரசன் மற்றும் அருண் பாண்டி ஆகியோர் அந்த பள்ளி மாணவியிடம் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் ஒரு சிலரிடமும் அந்த மாணவியின் புகைப்படத்தை அனுப்பி அவர்களும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கவியரசன் அருள்பாண்டி போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |