பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாகிஸ்தானில் 2 வீரர்கள் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரின் மூன்று ராணுவ சோதனைச் சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும், இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஷவால் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் கடந்த சனிக்கிழமை அன்று பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டனர்.
மேலும் அதில் இருவர் காயமடைந்ததாகவும், ஒருவர் பலியானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ராணுவ வட்டாரங்கள், தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவிகளைக் கொண்டு அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதேசமயம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கு இந்த நடவடிக்கையில் எந்தவித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.