2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் அப்பகுதியில் வசித்து வரும் 2 சிறுமிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த 2 சிறுமிகளும் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையறிந்த சிறுமிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் சுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.