Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நகராட்சி கட்டிடத்திற்கு வாடகை உயர்வு…. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…. குத்தகைகாரருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி வடுவூர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் ஓன்று உள்ளது.  இந்தக் கட்டிடத்தில்  இரண்டு கடைகளை குத்தகைக்கு எடுத்திருப்பவர் அரசாணைப்படி வாடகை உயர்வு செய்யப்பட்டதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு நகராட்சிக்கு சாதகமாகவே வந்துள்ளது.

இந்நிலையில் குத்தகைகாரர் வாடகை தொகையை செலுத்தாததால்  நகராட்சி ஆணையர் கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்பேரில் நகராட்சி இளநிலை பொறியாளர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கோமதி, நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோரது முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் கடைகளை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

Categories

Tech |