Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடன் தொகைக்கு கூடுதல் பணம் வசூல்…. நபர் அளித்த புகார்…. 2 பேர் கைது….!!

கடன் தொகைக்கு கூடுதல் பணம் வசூலித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மகளத்தூர் கிராமத்தில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் வசிக்கும் சுப்பிரமணியன் அவரது மகன் முருகன், கார்த்திகேயன் மனைவி பெரியநாயகம் ஆகியோரிடமிருந்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை 2 ஆண்டுகளுக்குள் வழங்கும் வகையில் தனது வீட்டை வைத்து ஒரு ஆவணத்தையும் ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

இந்நிலையில் அதன் காலக்கெடு முடியும் நிலையில் குமரேசன் ரூ.31 லட்சத்தை வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து கொடுத்துள்ளார். ஆனால் சுப்பிரமணியன் அதை வாங்காமல் ரூ.52 லட்சத்து 55 ஆயிரம் கொடுத்தால் தான் திருப்பி மறுகிரையம் செய்து தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் வேறு வழியில்லாமல் வீட்டின் மதிப்பு ஒரு கோடி என்பதால் ரூ.52 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு குமரேசன் வீட்டை திருப்பியுள்ளார். இதுகுறித்து குமரேசன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கூடுதல் பணம் வசூலித்த சுப்பிரமணியன், முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |