Categories
உலக செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. 30 வருடங்கள் கழித்து கைதான மதபோதகர்….!!!

கனடா நாட்டில் 30 வருடங்களுக்கு பின் பாலியல் வழக்கில் மத போதகர் மற்றும் பெண் ஒருவர் கைதாகியுள்ளனர்.

கனடாவில் கடந்த 1987 ஆம் வருடத்தில் இருந்து 1990 ஆம் வருடம் வரை சிறுமிகள் இருவர் யார்க் பகுதியில் இருக்கும் ஒரு தேவாலயத்திற்கு வழக்கமாக சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமிகளை மத போதகரான Raymond Swash என்பவரும், ஒரு பெண்ணும் சேர்ந்து வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

பாதிப்படைந்த பெண் தற்போது தான், இது பற்றி புகார் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது. அதன்பிறகு, மத போதகரும் அந்த பெண்ணும் கைதாகி உள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு தற்போது வரை நிருபிக்கப்படவில்லை. எனினும் இவர்களால் வேறு யாராவது பாதிப்படைந்திருந்தால், தங்களிடம் தெரிவிக்குமாறு காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |