Categories
சினிமா தமிழ் சினிமா

2நிமிடத்தில் ஓகே சொல்லி…! செம கல்லா கட்டிய லைக்கா… குஷி மோடில் மணிரத்னம்.!!

இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க 2 நிமிடத்தில் ஓகே சொன்ன லைக் நிறுவனம்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில்,  இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ”பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. தற்போது வரை திரையரங்கில் ”சூப்பர் டூப்பர் ஹிட்” அடித்து கொண்டிருக்கும், பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. எனவே இந்த படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடி வருகிறார்கள்.

சென்னையில் நடந்த வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்கள்,  படத்தில் பணியாற்றிய பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குனர் மணிரத்தினம், பொன்னியின் செல்வன் நாவலை படித்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றி, வாசகர்கள் அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த கனவை எப்படியாவது திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது ஒரு பேராசை. அந்த பேராசையை நான் அடைந்து விட்டேன். இதனை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. எனவே முதலில் அனைவரையும் தலைவணங்கி கொள்கிறேன் என்று கூறிய அவர்,  தயாரிப்பாளர் சுபாஷ்கரன் சார் கிட்ட ”பொன்னியின் செல்வன்” படத்தை நான் எடுக்கப் போகின்றேன் என்று சொன்ன இரண்டே நிமிடத்தில் அவர் ஓகே சொல்லிவிட்டார்.

இந்த படத்தில் நடித்த அனைவரும் ஒரு குடும்பமாக நாங்கள் செயல்பட்டோம். அவர்கள் யாரும் இல்லை என்றால் இதனை நிச்சயமாக உருவாக்கி இருக்க முடியாது. கொரோனா காலகட்டத்தில் நடிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை ஏற்றாமல், கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தனர். பொன்னியின் செல்வன் படத்தில் துணை இயக்குனர்கள்,  தொழில் நுட்ப கலைஞர்கள் என நிறைய பேர் பணியாற்றினோம்.

இவர்கள் நமக்காக வேலை செய்கிறார்கள் என்று அவர்களை பார்க்கும்போது எனக்கு பயமாக இருந்தது. இவர்கள் எல்லோரும் என் கண் முன்னால் தெரிய மாட்டார்கள். எனக்கு பின்னால்தான் அனைவரும் வேலை செய்கிறார்கள். பொன்னியின் செல்வன் படத்த்தில், இவர்கள் பங்களிப்பு மிகப்பெரியதாக நான் கருதுகின்றேன். அனைவரையும் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை, அனைவருக்கும் நன்றி என நெகிழ்ந்து பேசினார்.

Categories

Tech |