Categories
உலக செய்திகள்

2 நாட்களுக்குப் பிறகு…. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுவன் உயிருடன் மீட்பு….!!!!

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். 

இந்தோனேசியா நாட்டில் மேற்கு ஜாவா தீவில்  சியாஞ்சூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6  ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்தது. இதில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நக்ராக் என்ற கிராமத்தில் மீட்பு பணியின் போது, நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவனை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பாட்டி உயிரிழந்துவிட்டார்.  அவரது உடலுக்கு அருகிலேயே சிறுவன் மயங்கிய நிலையில் கிடைத்துள்ளான். இந்த சம்பவத்தினால்  இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிருடன்தான் இருபார்கள் என்ற நம்பிக்கை அவர்களின் உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |