தொழில் அதிபரும், கொடை வள்ளருமான பில்கேட்ஸ் ஏற்கனவே கொரோனா வருவதை எச்சரித்ததை போலவே தற்போது மேலும் இரண்டு பேராபத்துகள் வரப் போவதாக தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனாவை பற்றி கடந்த 2015ஆம் ஆண்டு டெக் டாக் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அதைப்பற்றிப் பேசி எச்சரித்தார். எபோலா வைரஸ் தாக்குதல் அப்பொழுது பரவி வந்தது. இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, அணு ஆயுதங்களை விட கண்ணுக்குத் தெரியாத வைரசால் தான் நமக்கு ஆபத்து காத்திருக்கிறது.
சக்தி வாய்ந்த ஏவுகணைகளை விட நுண்ணிய வைரஸ்கள் மிகவும் ஆபத்தானது. கோடிக் கணக்கான உயிர்களை நாம் இழக்கும் ஆபத்து காத்திருக்கிறது. ஆனால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை. அதனை எதிர்கொள்வதற்கு ஒரு சுகாதார படையை உருவாக்க வேண்டியது அவசியம். வளரும் நாடுகளில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.
எபோலோ வைரஸ் காற்றில் பரவ வில்லை. ஆகையால் பேராபத்துகள் தடுக்கப்பட்டது. ஆனால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது என்று கூறி எச்சரித்தார். இந்நிலையில் டெரிக் முல்லர் என்பவர் சமீபத்தில் பில்கேட்ஸ் இடம் கலந்துரையாடி பேசினார்.
அப்போது பில்கேட்சிடம் அவர், 5 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் எப்படி கோரானா வருவதை கணித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பில்கேட்ஸ், சுவாச வைரஸ்கள் ஒவ்வொன்றாகத் தோன்றுகின்றன. இவைகள் மிகவும் ஆபத்தானது. எபோலோ தொற்றுக்காக நீங்கள் மருத்துவமனையில் இருக்கும்போதே மற்றவருக்கும் இது பரவி இருக்கும்.
அதன் மூலமாக அடுத்த சுவாச வைரஸ்கள் உருவாகியிருக்கும் என்று கூறினார். அதன்பின் டெரிக் முல்லர், மனிதர்கள் தயாராகாத வேறு பேரழிவு ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ளார். இன்னும் இரண்டு பேரழிவுகள் இருக்கிறது என்று பில்கேட்ஸ் கூறினார். பருவநிலை மாற்றத்தால் கொரோனாவால் இறந்தவர்களை விட ஒவ்வொரு ஆண்டும் இனி அதிக உயிரிழப்புகள் ஏற்படும்.
பேரழிவு பற்றி பேசுவதை மக்கள் யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அது பயோ தீவிரவாதம். உலகத்தை சேதத்தை ஏற்படுத்த விரும்பும் ஒருவர் வைரஸை உருவாக்க முடியும். இயற்கையால் ஏற்படும் வைரஸை காட்டிலும் இது போன்ற வைரஸ்கள் சேதத்தை அதிகமாக ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.