Categories
தேசிய செய்திகள்

“தலைக்கேறிய போதை” கொடூரமாக கொல்லப்பட்ட 2 மாத குழந்தை…. தந்தையின் வெறிச்செயல்…!!

தந்தை ஒருவர் குடிபோதையில் குழந்தையை அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் வசிப்பவர் தேவேந்தர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் இவர் தினமும் குடித்து விட்டு தன்னுடைய மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதேபோன்று சம்பவத்தன்று தேவேந்தர் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய மனைவி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை முற்றியதால் தேவேந்தர் அருகிலிருந்து கம்பை எடுத்து மனைவியை தாக்க தொடங்கியுள்ளார்.

அப்போது மனைவியின் மடியில் இரண்டு மாத குழந்தையை கூட அறியாத அந்த கொடூரன் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதல் காரணமாக அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து இந்திய தண்டனை சட்டம் 304ன் படி தேவேந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது தலைமறைவாக உள்ள தேவேந்தரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |