Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… 2 லட்ச ரூபாயை டிப்ஸாக கொடுத்த வாடிக்கையாளர்… அதன் பின் நடந்தது என்ன?…

அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு பீட்சா நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளர் 2.3 லட்சம் ரூபாய் டிப்ஸை ஒரு பணியாளருக்கு வழங்கிய நிலையில் அதன் பிறகு சுவாரஸ்ய சம்பவம் நடந்திருக்கிறது.

அமெரிக்க நாட்டின் ஸ்க்ரான்டான் நகரத்தில் இயங்கி வரும் ஒரு பீட்சா நிறுவனத்திற்கு சென்ற எரிக் ஸ்மித் என்ற நபர் சாப்பிட்ட பின் பீட்சாவிற்கான பில்லுடன் சேர்த்து தனக்கு பரிமாறிய  பணியாளருக்கு 2.3 லட்சம் ரூபாய் டிப்ஸ் கொடுத்திருக்கிறார். இதனால் அந்த பணியாளர் மகிழ்ச்சியடைந்தார்.

எனினும், அவர் டிப்ஸ் பணத்தை கடன் அட்டை மூலமாக தான் வழங்கியிருக்கிறார். எனவே, அந்த பீட்சா நிறுவனம், அந்த பணியாளருக்கு டிப்ஸ் பணத்தை கொடுத்துவிட்டது. அதன் பின், அந்த வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ள தீர்மானித்திருக்கிறது. ஆனால், அதற்கு அடுத்த நாளே அந்த வாடிக்கையாளர் தான் கொடுத்த டிப்ஸ் பணத்தை திரும்ப தருமாறு கேட்க வந்திருக்கிறார்.

தவறுதலாக அதிகமான தொகையை கொடுத்ததாக கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல், தன் கடன் அட்டை மூலம் டிப்ஸ் பணத்தை பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இதனால், தாங்கள் வழங்கிய டிப்ஸ் பணத்தை திரும்ப மீட்க முடியாததால் கோபமடைந்த நிறுவனம் அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது.

Categories

Tech |