பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய தொழில்துறை அமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வெடி விபத்து குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவருடைய இணையப் பதிவில், “பட்டாசு ஆலை தொழிலை மீண்டும் தொடங்கிய அன்றே விபத்தில் சிக்கியது வேதனை தருவதாக உள்ளது” என தனது இரங்கலை குறிப்பிட்டுள்ளார். மேலும், முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்ட பட்டாசு உற்பத்தியாக இருந்தாலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.