Categories
உலக செய்திகள்

உக்ரைனின் ஒரு மாகாணத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

ரஷ்யப்படையினர் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது சுமார் 5 மாதங்களாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் என்னும் மாகாணத்தில் ரஷ்யப்படை, வெடிகுண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது.

இதில், இருவர் உயிரிழந்ததோடு, 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாண கவர்னரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்ததாவது, ரஷ்ய இராணுவத்தினர், டோப்ரோபிலியா சமூகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கிறார்கள். அதில் குழந்தைகள் இருவர் காயமடைந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |