Categories
சினிமா தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

2 வீட்டில் ரெய்டு….. சென்னைக்கு வாங்க…. விஜய்க்கு விருந்து வைக்கும் IT …!!

நடிகர் விஜய்க்கு சொந்தமான இரண்டு வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்திற்கு மக்களிடம் இருந்த அமோக ஆதரவால் கோடிக்கணக்கில் நல்ல லாபம் கிடைத்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து. மேலும் இந்த படத்தில் நடிகராக நடித்த விஜய்க்கு 50 கோடி ஊதியமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் AGS நிறுவனத்திற்கு சொந்தமான வீடு , நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய்யிடமும்  விசாரிக்க திட்டமிட்ட வரித்துறையினர்  கடலூரில் உள்ள நெய்வேலியில் நடைபெறும் மாஸ்டர் திரைப்பட தளத்திற்கு நேரடியாக சென்று நடிகர் விஜய்யிடம் விசாரித்தனர்.

இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது. விஜயிடம் விசாரணையை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் அவரை சென்னை அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டு நடிகர் விஜய்யின் காரிலே அழைத்துச் சென்றனர். இதனிடையே சென்னையில் இருக்கும் விஜய்யின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீடு , அலுவலகம் என இந்த சோதனை தொடர்கின்றது. அதே போல நீலாங்கரையில் உள்ள மற்றொரு வீட்டிலும் இந்த சோதனை தொடர்கின்றது. இதனால் தமிழ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. விஜய் வீட்டில் நடைபெறும் இந்த சோதனையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |