இரண்டு சிறுமிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது
கேரளாவை சேர்ந்த 2 சிறுமிகள் ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர் இதனை அறிந்த காவல்துறையினர் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களது செல்போனை கைப்பற்றி சோதனை செய்துள்ளனர். ஒரு சிறுமியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் முண்டகாயம் பகுதியை சேர்ந்த ராகுல் ராஜ், மகேஷ், ஆனந்த் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மொபைல் போனை சோதனை செய்த போது அதில் இருந்த புகைப்படங்கள், தொலைபேசி உரையாடல்கள் சட்கள் போன்ற அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தியதில் சில சிறுவர்களுடன் சிறுமிகளுக்கு தொடர்பு இருப்பதும் இவர்கள் இருவரும் வன்கொடுமைக்கு ஆளானதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்தே இவர்கள் இந்த பிரச்சினையில் சிக்கி இருப்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது.
இரண்டு சிறுமிகளில் ஒருவரை நான்கு பேர் அவர்களது குடியிருப்பிற்கு வரவழைத்து வன்கொடுமை செய்துள்ளனர். தற்போது மீட்கப்பட்ட 2 சிறுமிகளும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் அவர்களது உடல்நிலை தேறி வருவதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.