அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடித்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் ஆகும். இந்த பகுதியில் நேற்று பொது மக்களின் கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து வெடிகுண்டை அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று மற்றொரு குண்டும் வெடித்துள்ளது.
இதில் மூன்று பாதுகாப்பு பணியாளர்களும் ஒரு போலீஸ் அதிகாரியும் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரே சமயத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.