சீன நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீன நாட்டில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால், மக்கள் அதனை எதிர்த்து தீவிரமாக போராட தொடங்கினர். எனவே, மூன்று வருடங்கள் கழித்து விதிமுறைகளில் தளர்வு கொண்டுவரப்பட்டது. இதனால், மீண்டும் அங்கு கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
உயிர் பலிகளும் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பலிகள் குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில், பீஜிங் மாகாணத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் இரண்டு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் நான்காம் தேதிக்கு பின் இப்போது தான் கொரோனா பலியை சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.