Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 2-வது மரணம் – கொரோனாவால் தொடரும் சோகம் ….!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவையும் விட்டுவைக்காத கொரோனா பல்வேறு மாநிலங்களுக்கு வேகமாக பரவி வருகின்றது. கேராளாவில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லி , மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , உத்தரபிரதேசம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் என 70க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வந்த நிலையிலும் இந்தியாவின் முதல் உயிரிழப்பு கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தது.கடந்த பிப்ரவரி 29 ம் தேதி சவூதி அரேபியாவிலிருந்து கர்நாடக மாநிலம் கல்புர்க்கி வந்த 76 வயதான முகமத் சித்திக் உசேன் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் நேற்று தலைநகர் டெல்லியில் இரண்டாவது உயிரிழப்பு  அரங்கேறியுள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 69 வயது மூதாட்டி உயிரிழப்பு என்று டெல்லி மாநில சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.அங்குள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மூதாட்டியின் மகன் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

Categories

Tech |