நாமக்கல் மாவட்டம் மோகனுர் பகுதியில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவலகத்தின் கட்டுமான பணிகளை உரக்க வளர்ச்சித்துறை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் ஊராட்சிதுறை கூடுதல் துறை இயக்குனர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சரவணன் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மோகனுரில் சுமார் 2 கோடியே 93 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு கட்டுமானத்தின் தன்மை குறித்தும் பொருள்களின் தரம் குறித்தும் கேட்டறிந்து கட்டிட பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அய்யம்பாளையம், நொச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் 2 கோடியே 28 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படும் தார் சாலைகளையும் பார்வையிட்டுள்ளார். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சார்பில் 1,000 மரக்கன்றுகள் அமைக்கும் பணிகளையும் கேட்டறிந்துள்ளார். இந்த ஆய்வில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேன்மொழி, முனியப்பன் உட்பட பல்வேறு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.