இதுவரை 1,21,271 பேருக்கு கொரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சுமார் 32 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்திலும், எதிர்காலத்திலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் இருப்பு கணிசமான அளவு இருக்கும் என்பதை உறுதி படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது, ” நாடு முழுவதும் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்களுக்கு, குறிப்பாக நலன்புரி செஸ் நிதியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.6000 வரை பண சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.3000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.