Categories
உலக செய்திகள்

“2 மடங்கு கொரோனா அபாயம்” மக்களே இந்த இடத்துக்கு….. அதிகம் போகாதீங்க…..!!

உணவகங்களில் கொரோனா  பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய குரானா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நோய் பரவாமல் தடுக்க நோய் எந்த விதத்தில் பரவுகிறது. 

எந்த  வகையில் மக்களிடையே விழிப்புணர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பொது இடங்களில் அமர்ந்து உணவு மற்றும் நீர் அருந்துதல் மூலமாகவும் அதிகம் நோய் பரவுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |