Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க… நம்பி சாப்பிட்ட வாயில்லா ஜீவன்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

காளை கன்றுக்குட்டிகள் விஷம் கலந்து வைக்கப்பட்ட தவிடை தின்று உயிரிழந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கர்ணாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோபால். இவர் ஆடு மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரண்டு காளை கன்றுகளையும் ஒரு பசு கன்றையும் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். அது வயலில் சென்று மேய்ந்துள்ளது.  திடீரென்று மேய்ச்சலுக்கு சென்ற மூன்று குட்டிகளும் மயங்கி விழுந்துள்ளன. இதில் இரண்டு காளை கன்றுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த பசுக்கன்றை கோபால் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைகாக எடுத்து சென்றுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் கன்று உயிர் பிழைத்துள்ளது. இதனையடுத்து கன்றுகள் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கும் போது அப்பகுதியில் கீர்த்தி என்பவர் அவருடைய வயலில் அறுவடை செய்யப்பட்டபின் நெல்லை குவித்து வைத்திருக்கும் போது அதனை கால்நடைகள் வந்து தின்பதால் ஆத்திரமடைந்த அவர் நெல்லுக்கு அருகில் ஒரு பாத்திரத்தில் விஷம் கலந்த தவிடை வைத்துள்ளார். அதை தின்றதால் கன்றுகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோபால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கீர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |