Categories
உலக செய்திகள்

இந்த மூன்று நாடுகளுக்கே சென்றுள்ளது..! உலக அளவில் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

இதுவரை உலக அளவில் விநியோகம் செய்யப்பட்டுள்ள 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் மூன்று நாடுகளுக்கு மட்டுமே 60 சதவீத தடுப்பூசிகள் சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலகில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றுவதோடு பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பின்னரே மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உலக நாடுகள் பலவும் தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியானது 10 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ள 200 கோடி தடுப்பூசிகளில் மூன்று நாடுகளுக்கு மட்டுமே 60 சதவீதம் தடுப்பூசிகள் சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேஸ் இதுகுறித்து கூறியிருப்பது யாதெனில், இதுவரை உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ள 200 கோடி தடுப்பூசிகளில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கே 60 சதவீத தடுப்பூசிகள் சென்றடைந்துள்ளதாகவும், உலக நாடுகளிடையே கோவாக்ஸ் திட்டம் தடுப்பூசியை பகிர்ந்தளிப்பதில் முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் சுமார் 127 நாடுகளுக்கு கோவாக்ஸ் திட்டம் மூலம் கொரோனா தடுப்பூசி பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சுமார் 0.5 சதவீத தடுப்பூசிகளே தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் சென்றடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பல நாடுகளில் வயதானவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை. எனவே, விரைவாக தடுப்பூசிகள் விநியோகம் செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |