சென்னையில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் கொரோனா மூன்றாவது அலைக்கு பிறகு நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சென்னையில் 9 பேரும், தமிழகத்தின் 23 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 18 மாவட்டங்களில் கொரோனா வைரஸுக்கு சிக்கிச்சை பெற்று வருபவர்கள் திருவெற்றியூர் 4, மணலி 1, மாதவரம் 1, தண்டையார்பேட்டை 4, ராயபுரம் 5, திருவிக நகர் 3, அம்பத்தூர் 2, அண்ணாநகர் 11, தேனம்பாக்கம் 28, கோடம்பாக்கம் 12, வளசரவாக்கம் 7, ஆலந்தூர் 3, அடையாறு 15, பெருங்குடி 3, சோளிங்க நல்லூர் 12 ஆகிய மாவட்டங்களில் குர்ஆனை தோற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி சென்னையில் ஒரு நாளுக்கு கொரோனா பாதிப்பு 10 கீழ் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 9 பேருக்கு மட்டுமே தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனவால் 7, 51, 11 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7, 41, 916 பேர் குனமடைந்துலதகவும், 130 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் 9,068 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும்” தகவல் வெளியா உயுள்ளது.