அத்திவரதர் தரிசனத்தில் சீருடை அணிந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி மாவட்ட ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளிதுள்ளார்.அப்போது கூறிய அவர், உணர்வுபூர்வமாக பேசப்பட்ட வார்த்தையை பெரிதுபடுத்த வேண்டாம். பாதுகாப்பு பணியில் காவலர்கள் மிக சிறப்பாக பணியாற்றினர். நாங்கள் ஒரே குடும்பமாக செயல்படுகின்றோம்.
இந்த நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பலரால் பகிரப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நகரத்தில் காவல்துறையும் சரி , மாவட்ட நிர்வாகமும் சரி அனைத்து துறையும் ஒன்றிணைந்து ஒரு ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம்.எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. இங்கே 2 ஏடிஜிபி இருக்காங்க. 47 எஸ்பி இருக்காங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றோம் .இங்கு இருக்கின்ற உண்மை நிலைமை தெரியாம தவறான செய்திகளை பரப்புகிறார்கள். இதை பரப்ப வேண்டாம் என்கிறும் , எங்களின் கூட்டு முயற்சிக்கு இடையூறு இல்லாமல் குந்தகம் இல்லாமல் எல்லாரும் எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.