தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் முதல் கட்ட தேர்தல் அக்டாபர் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 77.43% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47% வாக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் தேர்தலில் பதிவான வாக்குகளை வருகின்ற 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.