தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பெற்றோர்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் மணிவாளா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டு, மூன்று, மற்றும் நான்காம் வகுப்பு மாணவிகளுக்கு உடற்பயிற்சி ஆசிரியர் சீனிவாசன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதையடுத்து தொல்லை தாங்காமல் குழந்தைகள் பெற்றோர்களிடம் சென்று ஒப்பாரி வைத்துள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள் சீனிவாசனுடன் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினர். இதையடுத்து ஆசிரியர் சீனிவாசனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஸ்ரீனிவாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.