சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் 2.17 நிமிடங்களில் ஆறு கியூப்சை சரி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதுவும் தண்ணீருக்குள் மூழ்கி இருந்து இந்த சாதனையை செய்துள்ளார். சென்னையை சேர்ந்த இளையராம் சேகர் என்பவர் ரூபிக்ஸ் கியூப் எனப்படும் கணித விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். இவர் நீருக்கடியில் 2.17 நிமிடங்கள் க்யூப் சைஸ் சரி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “கடந்த 2013 ஆம் ஆண்டு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது கியூப்ஸ் மீதான ஆர்வம் அதிகரித்தது. இதனை கற்றுக்கொள்ள தொடங்கினேன்.
இதில் உலக சாதனை படைத்தவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். இதனால் தானும் இதுபோன்ற புதிய சாதனையை படைக்க வேண்டும் என்று முயற்சி செய்து நீருக்கடியில் 2.17 நிமிடங்களில் 6 கியூப் சைஸ் சரி செய்து சாதனை படைத்துள்ளேன். மேலும் எனக்கு சரியாக நீச்சல் தெரியாது. பயிற்சி எடுக்கும் நேரங்களில் குலத்தின் ஆழமற்ற பகுதியில் மேற்கொண்டேன்” என்று தெரிவித்தார். இதற்கு முன்பாக 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் ஐந்து கியூப்சை தண்ணீருக்கடியில் இருந்து சரி செய்து சாதனை படைத்த நிலையில் அந்த சாதனையை இவர் முறியடித்துள்ளார்.