Categories
மாநில செய்திகள்

2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள், ரூ.1,000 நிவாரணம் வழங்கப்பட்டது: முதல்வர் உரை!

கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றிவருகிறார்.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். தற்போது பேசி வரும் அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பஹே நான் அறிவேன். தனிமனித உறுதியும், ஒழுக்கமும் கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கம் என்பதை நாம் உணர வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை தமிழ்நாட்டில் சுமார் 6லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை மூலம் 86% கொரோனா பாதித்தவர்கள் எவ்வித அறிகுறியும் இல்லாதவர்கள் என்பது தெரியவந்தது. நோய் தொற்றின் தகவல்களை பகிர்ந்துகொள்ள வலைத்தளம் ஒன்று புதிதாகி உருவாக்கப்பட்டது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களை கண்காணிக்க விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மாதரும் மாநில எல்லைகளில் அதிகாரிகள் உதவியுடன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. மேலும், நாட்டிலேயே அதிகபட்சமாக 72 மையங்கள் மூலம் தினமும் 13,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை, 2.01 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள், ரூ.1,000 நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |