75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது. 75வது விழா என்பதால் வழக்கமான அதைவிட கோலாகலமாக இந்த விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் ஒவ்வொரு நாட்டினரும் தங்களது தேசிய கொடியை பிடித்து அணிவகுத்து வருவது போன்று பல்வேறு நாட்டைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள் தனிதனியாக ரெட் கார்பெட்டில் அணிவகுத்து வந்தனர். அந்தவகையில் இந்திய அணியில் நடிகைகள் தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன், ரிக்கி கெஜ் அணிவகுத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மாதவன் “கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை. கொரோனா காலத்தில் என்னால் சரியாக நடிக்க முடியவில்லை. இதனால் சம்பளம் இல்லை. ஓடிடி மட்டுமே என்னை சினிமாவில் தக்க வைத்தது” என்று தெரிவித்தார். நம்பி நாராயணனின் வாழ்க்கையை படமாக இயக்கியுள்ள மாதவன், நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் கேன்ஸ் திரை விழாவில் போட்டு காண்பிக்கப்பட்டது.