தனது 35 ஆவது வயதில் ஓய்வெடுக்க தொடங்கிய வாலிபர் ஒருவருக்கு 2 ஆண்டுகளில் பணக்காரராக இருந்து போர் அடித்து விட்டதால் அவர் மீண்டும் வேலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் தான் சம்பாதித்த பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய துவங்கியுள்ளார்.
இதன் மூலம் அவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு 62 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. ஆகையினால் இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த வாலிபர் தனது 35 ஆவது வயதில் ஓய்வெடுக்க நினைத்து 2 ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை கழித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் 2 ஆண்டுகளாக அவருக்கு பணக்காரராக இருந்து போர் அடித்துவிட்டதாகவும், அதனாலேயே அந்த வாலிபர் மீண்டும் வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.