Categories
தேசிய செய்திகள்

2 வருடமாக மகளுக்கு பாலியல் வன்கொடுமை….. தந்தைக்கு சாகும் வரை சிறைத்தண்டனை…. அதிரடி தீர்ப்பு….!!!!

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 13 வயது நிரம்பிய சிறுமி ஒருவருக்கு பள்ளியில் பாலியல் வன்கொடுமை குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார். அதில் தன்னுடைய தந்தையே இரண்டு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு பள்ளியிலிருந்து புகார் வந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் தந்தையை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம் மாணவியின் தந்தைக்கு சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் குற்றவாளியின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றவாளிக்கு கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

Categories

Tech |