Categories
உலக செய்திகள்

2 வயது குழந்தையை கூண்டில் அடைத்த பெற்றோர்… உடல் முழுவதும் ரத்தமாக சிறுவன் மீட்பு… பதற வைக்கும் சம்பவம்…!!

ஸ்காட்லாந்தில் 4 வயது சிறுவன் ரத்த காயங்களுடன் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்காட்லாந்தில் உள்ள East Ayrshire என்ற இடத்தில் 4 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக அலைந்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக அச்சிறுவனை மீட்டு ருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுவனின் சட்டையை கழற்றி பார்த்த போது உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்துள்ளது.

இதனால் சிறுவன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதியுள்ளனர். அதன்பின்பு சிறுவனுக்கு சான்விட்ஜ் சாப்பிட கொடுத்துள்ளனர். உடனடியாக அச்சிறுவன் 2 சான்விட்ஜ்களையும் ஒரே நேரத்தில் வேகவேகமாக சாப்பிட்டதுடன் தட்டில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி மற்றும் உருளைகிழங்குகளையும் வேகமாக சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு மேலும் 3 சான்விட்ஜ்கள்  மற்றும் ஒரு ஆப்பிள் போன்றவற்றையும் அச்சிறுவன் கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இச்சிறுவன் பல நாட்களாக சாப்பிடாமல் பசியில் இருந்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்றபோது இரண்டு வயதான குழந்தை ஒன்று மரத்தால் செய்யப்பட்ட கூண்டு ஒன்றில் அடைக்கப்பட்டிருந்துள்ளது. அக்குழந்தைக்கு டயப்பர் கூட மாற்றாமல் இருந்துள்ளது. இந்த சிறுவன் வீட்டில் இருந்த ஜன்னலின் வழியாக நான்கு அடி தூரம் உயரத்திலிருந்து விழுந்திருக்கிறார்.

சிறுவனின் பெற்றோர் Claire Boyle(30) மற்றும் Timothi Jonston(57) ஆகிய இருவரும் இது எதையுமே கவனிக்காமல் இருந்துள்ளனர். மேலும் மற்றொரு குழந்தையை ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு சாலையில் விற்க முயற்சித்ததாக முன்பே இவர்கள் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இதனால் குழந்தைகளை நன்றாக பராமரிக்க தவறியது மற்றும் குழந்தைகளை அலட்சியமாக நடத்தியது போன்றவற்றிற்காக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |