Categories
தேசிய செய்திகள்

2-வது ராக்கெட் ஏவுதளம்…. எங்கென்னு தெரியுமா?…. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்…..!!!!!!!

இஸ்ரோ நிறுவனம் இந்திய செயற்கை கோள்களைகளையும், மற்ற நாடுகள் தயாரிக்கும் செயற்கை கோள்களையும் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் (ஆந்திரா) உள்ள ஏவுதளங்களிலிருந்து விண்ணுக்கு செலுத்தி வருகிறது. அங்கு இருஏவுதளங்கள் இருக்கின்றன. இந்நிலையில் எதிர்கால தேவை, செலவினம், பாதுகாப்பு ஆகிய பல அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு மற்றொரு ஏவுதளம் அவசியமாகிறது. அதன்படி அந்த ராக்கெட் ஏவுதளமானது குலசேகரபட்டினத்தில் அமைய இருக்கிறது.
தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற 3 மாவட்ட கடலோர பகுதிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். முடிவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு மிக அருகிலுள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கலாம் என்று முடிவுசெய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதனை தொடர்ந்து, குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவரான கே. சிவன் பேசியபோது, இவ்வாறு ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே  அங்கு விரைவில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |