தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டிநடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பட நிறுவன சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். இதனையடுத்து இந்த திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கோப்ரா படம் விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று முந்தினம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
இந்நிலையில் கோப்ரா ரிலீஸ் ஆகி 2ப்வது நாளான நேற்று ரூ.5.50 கோடி தான் வசூல் செய்திருக்கிறது. இது முதல் நாள் வசூலே விட மூன்று மடங்கு குறைவாகும். வார இறுதி நாட்கள் தியேட்டர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படி இல்லை என்றால் கோப்ராவின் நிலை கவலைக்கிடம் தான். அதனைத் தொடர்ந்து கோப்ரா படத்தை தியேட்டர்களில் அல்லாமல் நேரடியாக ஓடிடியிலே ரிலீஸ் செய்திருக்கலாம் என்று சினிமா ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். விக்ரம் வித்யாசமான கெட்டப்புகளில் வந்து அசைத்தியதை தவிர படத்தில் எதுவும் இல்லை. ஹீரோயின் ஸ்ரீநிதி செட்டி வரும் காட்சிகள் சுவாரசியமாக இல்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் கோப்ரா படம் குறித்து சமூக வலைதளத்தில் மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு சென்று கோப்ரா படத்தை பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் கூட யோசிக்கும் படி ஆகிவிட்டது.