Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2-வது திருமணத்திற்கு தயாராகும் கணவர்…. மனைவி அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார்  அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த உஷா என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நானும் ஆனந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த கவுதமன் என்பவரும் காதலித்து வந்தோம்.  கடந்த 2014- ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு எனது குடும்பத்துடன் வசித்து வந்தோம். இந்நிலையில் நான் கடந்த 2017- ஆம் ஆண்டுகருவுற்றேன். இதனையடுத்து எனது கணவரின் பெற்றோர் என்னை விட்டு விட்டு வரச்சொல்லி அவரை கட்டாயப்படுத்தினர்.

இதனால் அவர் திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர்  சிறிது நாட்கள் கழித்து எனது கணவர் செல்போனில் இனி நான் உன்னுடன் வாழ மாட்டேன் என குறுஞ்செய்தி அனுப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான்  உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரின் பேரில்  காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி என் கணவரை என்னுடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மீண்டும் எனது கணவரின் பெற்றோர் அவருக்கு  இரண்டாவது  திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். எனவே என்னை எனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |