துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கும் வகுப்புகள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தேர்தல் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் காரைக்குடி நகராட்சி, தேவகோட்டை நகராட்சி, கானாடுகாத்தான் நகராட்சி , கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், நெற்குப்பை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, ஆகிய பகுதிகளில் வாக்கு பதிவு மையங்கள் அமைத்துள்ளதாகவும் எந்தெந்த மையங்களுக்கு யார் பணி மேற்கொள்வது என்பது குறித்து தேர்தலுக்கு முதல் நாள் நடைபெறும் 3-வது கட்ட பயிற்சியில் கூறப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.